செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (17:59 IST)

இருபெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர் !

உலகில் நாள்தோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் உள்ளது. அந்தவகையில் ஒரே நேரத்தில் 2 காதலிகளை மணந்துள்ளார் இளைஞர் ஒருவர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்து பவுர்யா. இவருக்கு வயது 24 ஆகும்.

இந்நிலையில் இவர் சில ஆண்டுகலாக இருபெண்களைக் காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் இருவரும் இளைஞரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளனர்.
எனவே, இன்று சந்து மவுர்யாவின் உறவினர்கள் 500 பேர் குழுமியிருக்க இளைஞர் மவுர்யா மேடையில்  தனது காதலி இருவரையும்  திருமணம் செய்துகொண்டார்.