செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:42 IST)

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Periayasamy
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக வீட்டுவசதி வாரிய வீட்டை பெரியசாமி ஒதுக்கியதாக புகார் எழுந்தது.
 
இந்த நிலையில் ஐ.பெரியசாமிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு ஐ.பெரியசாமியை எம்பி,எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
 
இந்த வழக்கை தாமாக முனவந்து நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்ததுடன், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து ஆணையிட்டார். வரும் ஜூலை மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.
 
இதனை எதிர்த்து பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரத்தது. 

 
இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கவும் , மூன்று மாத காலத்திற்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.