ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:12 IST)

இந்திய அதிகார அமைப்பு வீர மகளின் முன்னாள் சரிந்தது! - வினேஷ் போகத்க்கு வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி!

Vinesh Phogat protest

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

 

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கியூப வீராங்கனையை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள வினேஷ் போகத் அடுத்து தங்க பதக்கத்தையும் வெல்ல வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் வினேஷ் போகத்தை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி “இன்று ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை வீழ்த்தி வினேஷுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சிவசப்பட்டது.

 

வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் எண்ணம் மற்றும் திறன்களைக் கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் அவர்களின் பதில் கிடைத்துள்ளது.

 

இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று அவரது வீர மகளின் முன் சரிந்தது.

 

இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள்.

 

வாழ்த்துக்கள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக இந்திய மல்யுத்த சம்மௌனத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக கூறி வினேஷ் போகத் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களின் போராட்டத்தை பாஜக அரசு கண்டு கொள்ளாததும், மேலும் சிலர் அவர்களது போராட்டங்களை தவறான நோக்கம் கொண்டது என்று சித்தரித்ததையும் ராகுல்காந்தி மறைமுகமாக இந்த பதிவில் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K