திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:44 IST)

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்... இத்தனை கோடியா ?

கொரோனா காலத்தில் எத்தனையோ நடிகர்கள் நடிகைகள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் மக்களுக்கு உதவிகள் செய்தனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளைச் செய்து மக்கள் மனதில் நிரந்தமாக இடம் பிடித்த நடிகர்கள் என்றால் இரண்டுபேரை சொல்லலாம் ஒருவர் அக்‌ஷய் குமார். இன்னொருவர் சோனுசூட்.

இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிக்கை 2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து நடிகர் அக்‌ஷய்குமார் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இவர் இந்த வருடம் 48.5 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.  363 கோடி ஆகும்.
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் டுவைன் ஜான்சன் 87.5 மில்லியன் டாலர்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.