1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (16:45 IST)

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சமீபத்தில் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ரத்து என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பின் சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்ததற்கும் மதிப்பெண் கணக்கிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆய்வுக்குழு முடிவு செய்த மதிப்பெண்களுக்கு அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது