செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (18:45 IST)

பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறி காதலனுடன் சென்ற மணமகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் பியூட்டி பார்லருக்குச் செல்வதாகக் கூறி மணமகள் காதலருடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மொரீனா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்காக இரு வீட்டாரும்  நேற்று மாலையில் தயராகி வந்தனர்.

அப்போது, மணமகள் திடீரென்று தான் பியூட்டி பார்லர் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

பின்னர், பல மணி  நேரம் கடந்தும் மணமகளைக் காணவில்லை . அவர் திரும்பி வருவார் என காத்திருந்த பெற்றோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளை தேடி பியூட்டி பார்லர் சென்றனர். மணமகள் வீட்டிற்கு திரும்பிவிடுவார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மணமகள் திருமணத்திற்கு முன்பே தன் காதலருடன் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பெற்றோர் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார்  கொத்வாலி காவல்  நிலையத்திற்குச் சென்று மணமகளை காணவில்லை என்று புகாரளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.