செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:52 IST)

சிறுவனை மட்டும் குறிபார்த்து துரத்தி கொத்தும் பாம்பு…அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்புர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுள்ள சிறுவனை மட்டும் ஒரு பாம்பு தொடர்ந்து கடிப்பதும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதும் தொடர்கதை ஆகி வந்துள்ளது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளதாவது :

என் மகனை மட்டும் பாம்பு தொடர்ச்சியாகக் கடித்து வருகிறது. இத்துடன் பலமுறை அப்பாம்பும் கடித்துள்ளது. இது ஏன் எனத் தெரியவில்லை.  இங்கிருப்பதால்தான் என் மகனைப் பாம்பு கடிக்கிறது என நினைத்து என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அனுப்பினால் அங்கேயும் அவன் அப்பாம்பைக் கண்டதாகக் கூறுகிறான். மகனை பாம்பு இதுவரை 8 முறை கடித்துள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.