செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (12:11 IST)

புதுச்சேரியில் சிறுமியின் உடல் அடக்கம்..! கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்.!!

Child Funeral
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை வழக்கில் முதியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமி கொலை வழக்கு விவகாரத்தில், சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.
 
சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் உள்ள 5 பேரிடமும் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.  சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு நேற்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புதுச்சேரியில் பல இடங்களில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சிறுமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
Child
ஃபிரீசர் பாக்ஸ் மீது சிறுமிக்கு பிடித்த Teddy Bear  உள்ளிட்ட பொம்மைகள், அவர் பயன்படுத்திய பள்ளி புத்தகப்பை, Lunch Bag வைக்கப்பட்டன. இறுதி ஊர்வலம் நடைபெறும் நிலையில், சிறுமி படித்த பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 
தொடர்ந்து முத்தியால்பேட்டை சோலைநகர் பாப்பம்மாள் மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சிறுமி பயன்படுத்திய, புத்தகப் பை, பொம்மைகள், உடைகளுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுக்கு, குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.