வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:23 IST)

''பசு அரவணைப்பு தினம்'' வாபஸ் -விலங்கு நல வாரியம் அறிவிப்பு!

cows
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி  மாதம் 14  ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து பரவிய காதலர் தினம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த காதலர் தினத்திற்கு,இந்தியாவில் சில அமைப்புகள் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில்,  “இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம்”  அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இதற்கு கடும் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் கேலி கிண்டல, மீஸ்கள் பரவி வரும் நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பசு கட்டிப்பிடிப்பு தினம் என்ற அரவணைப்பை திருப்பப் பெறுவதாக மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.