வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (17:13 IST)

17 வயது சிறுவன் செய்த காரியம் : மொத்த ஊரும் சோகம் !

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள  டி.என் . பாளையத்திற்கு அருகே திம்பநாயக்கன் பாளையம் என்ற பகுதியில்  வசித்தவர்  அருண்குமார்(17). இவர்  அங்குள்ள ஒரு ஐ.ஐ டியில் படித்து வந்திருக்கிறார். ஆனால் சில நாட்களாக சரியாக கல்லூரிக்கு போகாமல் வீட்டிலும் , நண்பர்களுடன் வெளியிலும் சுற்றித்திரிந்திருக்கிறார்.
இந்நிலையில் தீடீரென்று  நேற்று தன் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். இதனால் அருணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . தற்போது அப்பகுதி முழுதும் சோகமயமாக காட்சி அளிக்கிறது.
 
தோழர்களின் தவறாக சகவாசம் காரணமாக கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அருண் தான் என்ன செய்கிறோம் ..? ஏது செய்கிறோம் ..? என உணர முடியாமல்தான் இந்த தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
 
வகுப்பில் நன்றாக படிக்கும் அருண்குமார், தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் அருண்குமாரின் இந்த தற்கொலை முடிவுக்கு அவரது தவறாக நண்பர்கள் மற்றும் அவர் கஞ்சா  போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அருணின் தற்கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.