வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (07:39 IST)

தொடங்கியது வாக்குப்பதிவு: தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தனது ஆட்சியின் முழு ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி சற்றுமுன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் திருநங்கை ஆவார்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும், ஆனால் நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கு பதில் 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் சந்திரசேகரராவ் அவர்களின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூட்டணியும், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன. மீண்டும் சந்திரசேகரராவ் ஆட்சியை பிடிப்பாரா? என்பதை வரும் 13ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்