வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2019 (08:06 IST)

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு மாநிலங்கள் எதிர்ப்பு: நாடு முழுவதும் அமல்படுத்தப்படுமா?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ஒரு சில மாநிலங்கள் அமல்படுத்திய போதிலும் சில மாநிலங்கள் அமுல்படுத்தப் போவதில்லை என எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது 
 
 
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என ஏற்கனவே மேற்குவங்க அரசு அறிவித்த நிலையில் தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் தங்கள் மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார். மேலும் புதிய புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பதிலாக தெலுங்கானா மாநிலத்துக்கு என தனி சட்டம் கொண்டு வருவோம் என்றும் கடுமையான அபராதம் விதித்து மக்களை வதைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும்  மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மூன்று மாதங்கள் கழித்தே அமல்படுத்துவோம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட இன்னும் ஒரு சில மாநிலங்களில் விரைவில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருவதால் இந்த சட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்படும்போது அபராதத் தொகை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது