வாட்ஸ் ஆப், ஸ்கைப் மீது செல்போன் நிறுவனங்கள் புகார்
இன்றைய இளைஞர்களிடையே வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற தகவல்தொடர்பு செயலிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது .
இந்த வரவேற்பை அடுத்து வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்கைப் வாய்ஸ் கால் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளால் தங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து டிராய்க்கு புகார் ஒன்றை அனுப்பினர். அதில், வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்றவை செல்போன் நிறுவனங்களை விட குறைந்த கட்டணங்களில் காலிங் சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக வாய்ஸ் கால்கள் செய்வதற்கு டேட்டா கட்டணங்களை மட்டுமே செலுத்தினால் போதுமானது. இதனால் செல்போன் நிறுவனங்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தொலைதொடர்பு விதிமுறைகளுக்குள் கொண்டு வந்து உரிய கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.