செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (09:03 IST)

சிந்துவிற்காக சண்டைபோடும் ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்கள்

சிந்துவிற்காக சண்டைபோடும் ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்கள்

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதை அடுத்து, இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிந்து.



இந்நிலையில், இந்தியாவிற்கு உலக அளவில் பெறுமை தேடி தந்த சிந்து, எங்கள் மாநிலைத்தை சேர்ந்தவர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், இல்லை, அவர் எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர் ராவும் கூறிவருகின்றனர்.  

அதற்கு காரணம், சிந்துவின், தந்தை தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் இருக்கும் நிர்மல் என்ற ஊரைச் சேர்ந்தவர். அதனால், சந்திரசேகர் ராவ், சிந்து எங்க பொண்ணு என கூறிவருகிறார்.

அதே நேரம் சிந்துவின் தாய் விஜயா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். அதனால், சந்திரபாபு நாயுடு, சிந்து, “மன அம்மாயி ” அதாவது அவர் எங்க பொண்ணு என கூறிவருகிறார்.