1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (14:00 IST)

ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் சிறார்கள் - அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள 16 வயதிற்கு உட்பட்ட பல சிறுவர்கள் ஆபாச படத்தின் மீது மோகம் கொண்டிருப்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.


 

 
இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் இண்டர்நெட் பிரவுசிங் செண்டர்கள் இயங்கி வருகிறது. பெற்றோர்களிடம் இருந்து பணம் வாங்கிச் செல்லும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் அங்கு சென்று ஆபாச படங்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஹைதராபாத்தில் வசிக்கும் ஏராளமனோர், தங்கள் பிள்ளைகள், பிரவுசிங் செண்டருக்கு செல்வதாக கூரி ஏராளமான பணங்களை வாங்கி செல்வதாக புகார் கூறினார். இதுபற்றி விசாரணை செய்ய போலீசார் களம் இறங்கிய போது, அங்குள்ள பிரவுசிங் செண்டர்களில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிறார்கள் போலீசாரிடம் சிக்கினர். 
 
ஆபாச படம் மட்டுமின்றி, ஐ.எஸ், தீவிரவாதிகள் பணயக் கைதிகளின் தலையை வெட்டும் கொடூரமான, வன்முறையை தூண்டும் வீடியோக்களையும் அவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், காவல் துறை தலைமை அலுவலகத்தில், அந்த சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். 
 
மேலும், சிறார்களை ஆபாச படங்கள் பார்க்க அனுமதிக்கும் பிரவுசிங் செண்டர்களின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். தங்களிடமிருந்து பணத்தை வாங்கிச் செல்லும் சிறார்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
 
இந்த விவகாரம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.