செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (12:53 IST)

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

classroom
வகுப்பறையில் ஆசிரியர் ஆபாச படம் பார்த்ததை மாணவர் கண்டுபிடித்ததை அடுத்து, அந்த மாணவரை ஆசிரியர் சரமாரியாக தாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில், குல்திப் யாதவ் என்ற ஆசிரியர் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை மாணவர் ஒருவர் பார்த்து, தனது நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த நிலையில், அதை கண்டு ஆத்திரம் அடைந்த ஆசிரியர், அந்த மாணவனின் தலைமுடியை பிடித்து சுவரின் மீது பலமாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மொபைல் போனில் ஆபாச வீடியோவை பார்த்ததை தனது மகன் பார்த்து மற்ற மாணவர்களிடம் கூறியதால், ஆசிரியர் ஆத்திரம் அடைந்ததாகவும் அதனால் கொடூரமாக தாக்கியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஆசிரியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Siva