ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (02:09 IST)

லஞ்ச வழகில் சிக்கிய தெலுங்கு தேச எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி ராஜினாமா?

தெலுங்கானா மேல் சபை தேர்தலில் ஓட்டுப் போட பணம் கொடுத்த வழக்கில் சிக்கிய, தெலுங்கு தேச எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்ய உள்ளார்.
 

 
தெலுங்கானா மேல் சபை தேர்தலில் தெலுங்குதேச வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுபோட, தெலுங்கானா ராஷ்டிர சமிதி நியமன எம்எல்ஏ ஸ்டீபன்சனுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுக்க தெலுங்கு தேச எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி முயன்றார்.
 
இந்த விவகாரத்தில், தெலுங்கானா லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து, கடந்த மே மாதம் 31ஆம் தேதி கைது செய்தனர். ரேவந்த் ரெட்டியின் நீதிமன்ற காவலை வரும் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தெலுங்கு தேச எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி ஐதாராபாத் உயர் மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 
இந்த நிலையில்,  ரேவந்த் ரெட்டி தனது எம்எல்ஏ பதவியை ராஜினா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கான உத்தரவை தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு பிறப்பித்துள்ளதாக தெலுங்கு தேச வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கோலாப்பூர் தொகுதியில் இருந்து ரேவந்த் ரெட்டி எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.