புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (09:56 IST)

யாருக்கு வரும் இந்த மனசு? தமிழிசையை மெச்சும் மக்கள்!!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தற்போது உள்ள அபாய நிலையை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகளை மேற்க்கொண்டுவருகின்றன. 
 
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் 3650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்களும் அடக்கம். இவர்களை அம்மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து விசாரித்துள்ளார். 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தெலுங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தும் வகையில் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி வெகுவாக பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார். 
 
தமிழிசையின் இந்த செய்லை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தெலங்கானா மட்டுமின்றி தமிழக மக்களும் இவரது இந்த செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.