மூடப்பட்டது தமிழ்வழி பள்ளிகள்.. தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு..!
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் தமிழ் வழி கல்விகள் மூடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கு மொழி கட்டாயம் என்ற அறிவிப்பின் காரணமாகவே தமிழ் கல்வி நிறுவனங்களில் கூட தமிழ் பாடம் நீக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் தெலுங்கு மொழியை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மொழி கட்டாயம் என்ற சட்டத்தால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 8 லட்சம் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran