1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:20 IST)

ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் பலர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜஸ்தான் அரசு, சுகாதாரத் துறை அதிகாரிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. 
 
பொதுமக்கள் தங்களது முகத்தை மாஸ்க் கொண்டு மூடிக்கொள்ளுமாறும், பொது இடங்களில் மற்றவர்களிடம் பேசுவதை தவித்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்
 
பன்றிக் காய்ச்சலைப் போல், கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு இதுவரை பரவிய நோய்களின் அளவைக் காட்டிலும் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.