ஸ்விக்கி அதிரடி அறிவிப்பால் ஆடி போன அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் ஜியோ மார்ட்

swiggy
ஸ்விக்கி அதிரடி அறிவிப்பால் ஆடி போன அமேசான்
siva| Last Updated: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (20:30 IST)
அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் சமீபத்தில் களத்தில் இறங்கிய ஜியோ மார்ட் ஆகியவை ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் பெற்று பொதுமக்களுக்கு டெலிவரி செய்து வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களும் ஓரிரண்டு நாட்கள் கழித்தே பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன
இந்த நிலையில் ஆர்டர் செய்த 45 நிமிடங்களில் பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்று அதிரடியாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக இன்ஸ்டாமார்ட் என்ற செயலியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் காய்கறிகள் பழங்கள் இறைச்சி ஐஸ் கிரீம் பிஸ்கட் உள்பட அனைத்து பொருள்களையும் ஆர்டர் எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் காலை 7 மணிமுதல் இரவு 12 மணி வரை எந்த நேரத்தில் ஆர்டர் செய்தாலும் ஆர்டர் செய்த 45 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்திற்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான டூவீலர் டெலிவரி பாய்ஸ் இருப்பதால் இது சாத்தியம் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இந்த அதிரடி அறிவிப்பால் ஆன்லைனில் தற்போது பொருட்களை விற்று வரும் அமேசான் ஃப்ளிப்கார்ட் ஜியோமார்ட் ஆகியவை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :