புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (10:49 IST)

130 நகரங்களை டார்கெட் செய்யும் “Swiggy”-ன் அடுத்த கட்ட பாய்ச்சல்!!

இந்தியாவில் 130 நகரங்களில் தனது கிளையை தொடங்க, பிரபல உணவு நிறுவனமான “ஸ்விக்கி” நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் உணவு விற்பனையில் இந்தியாவில் பெரும்பாலன மக்களின் பெற்றுள்ளதாக கூறப்படும் “ஸ்விக்கி” நிறுவனம், இந்தியாவின் முக்கியமான நகரங்களில் தனது கிளைகளை பரப்பிவருகிறது. இந்தியாவின் 500 நகரங்களில் ஸ்விக்கி நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 பல்கலைகழகங்களிலும் தங்களது கிளைகளை பரப்ப திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கூடுதலாக 130 நகரங்களில் தங்களது கிளைகளை தொடங்க ஸ்விக்கி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் பால்கோட், ஆந்திராவின் இந்துபூர், , மஹாராஷ்டிராவின் சவாந்வாடி, சங்கம்நர், தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட 130 நகரங்களில் தனது கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்விக்கி நிறுவனம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், பட்டபடிப்பு படித்தவர்கள் ஸ்விக்கி டெலிவரி பணிக்காக செல்லும் நிலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.