’ஸ்வதேஸ்’: வெளிநாட்டில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு!
வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்பியவர்களுக்காக ஸ்வதேஸ் என்ற இணையதளத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் பல நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளில் வசித்து வந்த இந்தியர் பலரும் தங்கள் வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட 80,000 பேர் நாடு திரும்பியுள்ள நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
ஸ்வதேஸ் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் www.nsdcindia.org/swades என்ற இணையதளத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், தங்கள் விவரங்களை பதிவேற்றலாம். இதில் இருக்கும் படிவத்தில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.