சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து போராட்டம்: பிரபல நடிகர் தொடங்கி வைத்தார்

Last Modified வியாழன், 27 டிசம்பர் 2018 (07:45 IST)
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து ஒருசில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோதிலும் பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வரும் நிலையில் அதே பெண்களில் சிலர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்புக் குழுவில் இருந்த பெண்கள் சார்பில் நேற்று தீபம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.

கேரளாவில் உள்ள களியக்காவிளையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை பிரபல மலையாள நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி துவங்கி வைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :