ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:52 IST)

சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்: பாஜக பிரமுகர் அதிர்ச்சி கருத்து..!

சத்ரபதி சிவாஜி சூரத் நகரை கொள்ளை அடித்தார் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்த நிலையில் அதற்கு பாஜகவினர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவரே சூரத் நகரை சிவாஜி இரண்டு முறை கொள்ளை அடித்தார் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை சமீபத்தில் கனமழை காரணமாக இருந்து விழுந்ததை எடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து முதல் ஏற்பட்டு வருகிறது.

ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற புத்தகத்தில் சூரத் நகரை சிவாஜி கொள்ளை அடித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. வரலாற்று புத்தகங்களில் கூட 1664 மற்றும் 1670 ஆண்டுகளில் இரண்டு முறை சூரத்தை சத்ரபதி சிவாஜி கொள்ளை அடித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளை அடிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறியிருந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகர் நாராயணன் ரானே என்பவர் சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளை அடித்தது உண்மைதான் என தெரிவித்துள்ளார்.

நான் ஒரு வரலாற்று ஆசிரியர் இல்லை, ஆனால் அதே நேரத்தில் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தை படித்து உள்ளேன், சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளை அடித்தார் என்றும் நாராயணன் ரானே திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva