1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (16:01 IST)

கருணை அடிப்படையில் வேலை என்பது உரிமை அல்ல: சுப்ரீம் கோர்ட்

Supreme
கருணை அடிப்படையில் வேலை என்பது உரிமை அல்ல அது ஒரு சலுகை மட்டுமே என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏஎப்சிடி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் கடந்த 1995 ஆம் ஆண்டு வேலையில் இருக்கும் போது உயிரிழந்தார். அந்த ஊழியரின் மனைவி வேறு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை என்றும் தற்போது அந்த ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறிய போது கருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது ஒரு சலுகையே தவிர உரிமை இல்லை என்றும் திடீரென ஒரு குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க படுகிறது என்றும் ஆனால் அந்த வேலையை உரிமையாக கேட்டு வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது