செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (20:27 IST)

திருப்பதி லட்டு விவகாரம்.. 5 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைப்பு..!

Tirupathi Laddu
திருப்பதி லட்டில் மாடுகளின் கொழுப்பு கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் சிபிஐ சிறப்பு குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், தற்போது ஐந்து பேர் கொண்ட சிபிஐ சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்பில் இருந்து இருவர், ஆந்திர மாநில அதிகாரிகள் இருவர், மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தில் இருந்து ஒருவர் என ஐந்து பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநில காவல் துறையிலிருந்து சர்வஸ்ரேத் திரிபாதி மற்றும் கோபிநாத் ஆகிய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்காக மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு விரைவில் விசாரணையை தொடங்கும் என்றும் ஆந்திர மாநில காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியசாமி உள்பட ஒரு சிலர், திருப்பதியில் லட்டு விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் நான்காம் தேதி நடைபெற்றது. அப்போது சிபிஐ சிறப்பு குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva