புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (19:15 IST)

இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? - உச்சநீதிமன்றம் காட்டம்

supreme
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
அப்போது பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோருவதுதான் நீதிமன்றத்தில் வேலையா? எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? என்றும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர் 
 
இதனை அடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva