செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:24 IST)

தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம்: அதிர்ச்சி அடைந்த பெண் தேர்வர்!

sunny
தேர்வு எழுத சென்ற இளம்பெண்ணின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த பெண்ணின் ஹால் டிக்கெட் அவரிடம் வழங்கப்பட்ட போது அந்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தேர்வு குழுவினர் விசாரணை நடத்திய போது அந்த பெண் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததாகவும் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக தவறாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவு செய்ததாகவும் அதனால் தான் இந்த குழப்பம் நேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
 
 இருப்பினும் தேர்வு ஆணையம் புகைப்படத்தை சரியாக கவனிக்காமல் ஹால் டிக்கெட்டை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய தேர்வு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva