1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (15:41 IST)

ஜே.ஈ.ஈ தேர்வு: 300க்கு 300 மதிப்பெண் பெற்றும் மீண்டும் தேர்வு எழுதும் மாணவர்!

jee
ஜே.ஈ.ஈ தேர்வு: 300க்கு 300 மதிப்பெண் பெற்றும் மீண்டும் தேர்வு எழுதும் மாணவர்!
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வில் 300க்கு முதல் 300 மதிப்பெண் பெற்று 100 சதவீத வெற்றியை பெற்ற போதிலும் அந்த மாணவர் மீண்டும் தனது மதிப்பெண்ணை உறுதி செய்து கொள்ள இரண்டாவது முறையாக தேர்வு எழுத உள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நவ்யா ஹிசாரியா என்ற மாணவர் சமீபத்தில் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் 300க்கு 300 மதிப்பெண் பெற்று முதல் நபராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
இருப்பினும் அவர் மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத போவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது முறை முயற்சிப்பதன் மூலம் எனது மதிப்பெண்ணை நான் உறுதி செய்து கொள்ள முடியும் என்றும் இரண்டாவது முறை குறைவான மதிப்பெண் பெற்றாலும் அட்வான்ஸ் தேர்வுக்கான பயிற்சியாக எடுத்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஒருவேளை அவர் இரண்டாவது முறை எழுதும் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற போதிலும் 2 தேர்வில் எது அதிகமோ அந்த மதிப்பெண் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் அவர் 300 மதிப்பெண் பெற்றதாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது