செல்ஃபி மோகம்: ரயில் மோதி விபத்து: அதிர்ச்சி வீடியோ!!
ஹைதராபாதில் இளைஞர் ஒருவர் ரயில் செல்லும் போது செல்ஃபி எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதை செய்தபோது ரயில் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் பாரதிநகர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன் நண்பர்களுடன் சிவா என்ற மாணவன் ரயில் வரும் போது அதனுடன் செல்பி வீடியோ எடுக்க வேண்டும் என்று தண்டவாளத்தில் நின்றுள்ளார்.
ரயில் வேகமாக வரும் போது செல்ஃபி வீடியோவை ஆன் செய்து கமென்டரி கொடுத்தவாறே நின்றிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சிவா மீது ரயில் மோதியது.
பலத்த காயமடைந்த சிவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.