புத்தாண்டு குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபாவின் வாழ்த்துரை
2022 புத்தாண்டு குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபா காணொளி மூலமாக வாழ்த்துரை கூறியுள்ளார்.
ரவிசங்கர் பாபா தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர்.
வரவிருக்கும் 20220புத்தாண்டு குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாபா காணொளி மூலமாக வாழ்த்துரை கூறியுள்ளார். அதில், மனிதகுலம் பல சவால்களை எதிர்கொண்டது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுநோயால் மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் அதை எதிர்கொள்கிறோம்.
2022 ஆம் ஆண்டை நீண்ட மன வலிமை மற்றும் தன்னம்பிக்கையுடனும் வரவேற்போம். நாம் எப்போதும் ஒரு முற்போக்கான பாதையை நோக்கி நகர்கிறோம். தியானம் செய்வதின் மூலமும், சரியான உணவை பின்பற்றுவதன் மூலமும் மனம் மற்றும் உடல் இரண்டையும் கவனித்துக் கொள்வதன் மூலமும், நமது ஆன்மீக சக்தியை பெறுவோம். மற்ற மனநிலைக்கு உணர்திறன் செய்வோம்.
உங்கள் சொந்த மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் 2022 ஐ மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்போம்.