திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (14:44 IST)

சொகுசு விடுதியில் போதை விருந்து; தமிழ் நடிகை உள்ளிட்ட பலர் சிக்கினர்!

ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் நடந்த போதை விருந்தில் தமிழ் நடிகை உள்ளிட்ட பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில் ரகசியமாக போதை பொருள் விருந்து நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீஸார் அந்த ஓட்டலில் புகுந்து போதை விருந்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

அதில் திரைப்பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்திரி மகள், ஆந்திர முன்னாள் டிஜிபி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் உட்பட 148 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். பிடிப்பட்டவர்களில் திரைப்பட நடிகை நிகாரிகாவும் ஒருவர்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிகாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகாரிகா அந்த ஓட்டலில் இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.