முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள மனைவிக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் வற்புறுத்தியதாகவும், ஆனால் அவரது மனைவி மறுத்ததை அடுத்து முத்தலாக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 45 வயது நபர், தன்னுடைய 2வது மனைவியை அலுவலக பார்ட்டிக்கு அழைத்துச் சென்றபோது, தனது முதலாளியுடன் உறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் மனைவி அதற்கு மறுக்கவே, "உன்னுடைய தந்தையிடம் இருந்து 15 லட்ச ரூபாய் வாங்கி வா" என்று கூறியுள்ளார்.
இதற்கும் மனைவி மறுத்ததை தொடர்ந்து, அவர் தன்னுடைய மனைவிக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற, இரண்டாவது மனைவியை உடல் ரீதியாக சித்ரவதை செய்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, முத்தலாக் கூறிய கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva