வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:08 IST)

ஆபாச பொம்மைகளை அகற்ற வேண்டும்:சிவ சேனா ஆர்ப்பாட்டம்

மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்படும் ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டத்தில் சிவ சேனா அமைப்பினர் இறங்கியுள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவ சேனா அமைப்பினர் மராட்டியர்களின் உரிமைக்காகவும், மராட்டிய கலாச்சாரத்தை காப்பதற்காகவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையின் விலே பார்லே பகுதியிலுள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றவேண்டும் என சிவ சேனா அமைப்பினர் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து சிவ சேனாவை சேர்ந்த மகளிர் அணியினர் விலே பார்லே பகுதியிலுள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றினர்.

மேலும் இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளிலுள்ள ஆபாச பொம்மைகளைய்யும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிவ சேனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.