ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (08:20 IST)

கர்நாடகாவில் வசிப்பவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்: முதல்வர் சித்தராமையா

Siddaramaiah
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் கட்டாயம் கன்னடம் கற்றுக் கொண்டு பேச வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமைய்யா  தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கர்நாடக மாநிலத்தில் வேலை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கன்னட மொழியை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்  இன்னும் கன்னடம் தெரியாமல் கோடிக்கணக்கான ஒரு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கன்னடர்கள் முதலில் கன்னட மொழியை கற்று கொள்ள  வேண்டும் அதேபோல் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் மொழியை கற்காமல் எதையும் செய்ய முடியாது என்பதால் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமைய்யா  நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.
 
மேலும் அதிகாரிகள் அமைச்சர்கள் கூட ஆங்கிலத்தை பயன்படுத்தி வருகிறார்கள், இனிமேல் கன்னடத்தை அவர்களும் பயன்படுத்த வேண்டும் என்றும்  கன்னடம் தான் கர்நாடக மாநிலத்தில் அலுவல் மொழி என்றும் சித்தராமையா  தெரிவித்தார்.

Edited by Siva