திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மே 2023 (19:37 IST)

விட்டுக்கொடுத்த டி.கே.சிவக்குமார்? முதல்வராகும் சித்தராமையா! – எதிர்பார்ப்பில் கர்நாடகா!

Siddaramaiah
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் முதல்வர் யார் என்ற கேள்வி இருந்து வருகிறது.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவை தோற்கடித்து தனி பெரும்பான்மை பெற்று வெற்றியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி இருந்து வருகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையே கர்நாடக முதல்வரை தீர்மானிக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசியுள்ளார். இதனால் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டி.கே.சிவக்குமாரின் பேச்சும் அமைந்துள்ளதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K