வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (15:04 IST)

போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டிய ’ஷாருக்’ கைது !

போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டிய ’ஷாருக்’ கைது !

சமீபத்தில் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், பள்ளிகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
 
3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 42க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட பகுதி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, ஒரு போலீஸ்காரரை ஒரு வாலிபர் துப்பாக்கி காட்டி மிரட்டினார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலானது.
 
போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபரை கைது செய்ய வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். 
 
இந்நிலையில், டெல்லி வன்முறையின் போது , ஜாபார்பாத்  பாகுதியில், சுவப்பு நிற டி சர்ட் அணிந்து,போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் பெயர் ஷாரூக் . உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்தார், இன்று ஷாம்லி மாவட்டத்தில் பதுங்கி இருந்த போது ஷாருக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.