புருஷனை வைத்துக்கொண்டு விதவைக்கான பென்ஷன் வாங்கும் பெண்கள்
உத்திரபிரதேசத்தில் கணவர் உயிரோடு இருக்கும்போதே சில பெண்கள் விதவைக்கான நல்வாழ்வு உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
கணவரை இழந்து வாழும் பெண்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தீப் குமார். இவரது மனைவியில் செல்போனிற்கு, உங்கள் அக்கவுண்டிற்கு 3000 தொகை வந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனால் குழப்பமடைந்த அவர் இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது, இது விதவைகளுக்கான பென்ஷன் தொகை என அதிகாரிகள் கூறியுள்ளனர். புருஷன் தாம் உயிரோடு இருக்கும்போதே இந்த தொகை எப்படி வந்தது என அவர் கேட்டுள்ளார்.
பிறகு தான் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. கிட்டதட்ட அதே கிராமத்தை சேர்ந்த 22 பெண்கள் விதவைத்தொகையை தவறாக பெற்றுவருவது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.