வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (17:09 IST)

திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும் வெற்றி.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தோல்வி..!

Sasi Tharur
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நட்சத்திர தொகுதி வேட்பாளர்களின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவே எதிர்பார்த்த தொகுதிகளில் ஒன்று திருவனந்தபுரம் தொகுதி.

இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில் அவர் சுமார் 16,000 என்ன வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 358155  வாக்குகள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவீந்திரன் என்பவர் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்ற சசிதரூர் தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva