புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (09:08 IST)

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி: பிரபல சாமியார் அறிவிப்பு!

acharya samiyar
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி: பிரபல சாமியார் அறிவிப்பு!
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன் என பிரபல சாமியார் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி லூலு மாலை திறந்து வைத்தார்
 
அந்த மாலில் சில முஸ்லிம்கள் தொழுகை நடத்திய வீடியோ இணையதளங்களில் வெளியானது 
 
இது குறித்து லூலு நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் கைது செய்தனர் 
 
இந்த நிலையில் தொழுகை நடத்திய இடத்தை சுத்தப்படுத்த போவதாக சாமியார் ஆச்சார்யா மகாராஜா வந்ததை அடுத்து அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஆச்சாரியா மகாராஜா இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்