1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:08 IST)

நான் சுடவில்லை; அதுவாக இறந்தது: நீதிமன்றத்தை அதிரவைத்த சல்மான்கான்

மானை நான் சுட்டுக்கொல்லவில்லை, அது இயற்கையாக இறந்தது என சல்மான்கான் கூறியது நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
1998ஆம் ஆண்டில் மானை சுட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 
 
இந்த வழக்கில் சல்மான்கான் இன்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி 65 கேள்விகள் கேட்டார். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு சல்மான்கான் தவறு என்று பதில் அளித்துள்ளார். மானை நான் சுடவில்லை, அது இயற்கையாக இறந்தது என்றும் கூறியுள்ளார்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, உங்கள் காரில் ரத்தக் கறையும், மானின் முடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதே என்று கேட்டார். அது உண்மை இல்லை என்று சல்மான்கான் கூறியுள்ளார்.
 
துப்பாக்கி வைத்திருந்த வழக்கு மற்றும் காரை ஏற்றி கொன்ற வழக்கு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சல்மான்கான் இதிலிருந்தும் விடுவிடுக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.