செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (14:26 IST)

தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை, மாணவி ஓட்டம்...

abuse
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை, மாணவி போன விவகாரத்தில் இருவரும் சென்னையில் மீட்கப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.

மாணவி காணாமல் போன அதே நாளில் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தங்களின் மகளை அந்த ஆசிரியைதான் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து, ஆசிரியையின் பெற்றோரும் தங்கள் மகளைக் காணவில்லை என்று புகாரளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ஆசிரியை மற்றும் மாணவி இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை கடந்த 3 ஆம் தேதி வெளியிட்டிருந்தனர். அதில், தாங்கள் இருவரும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் என்று கூறினர்.

இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, போலீஸார் அவர்களை மீட்டனர்.  தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.