திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:17 IST)

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே! அதிரடி அறிவிப்பு!

theater
தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அந்த ஒரு தினத்தில் மட்டும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75  மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சுமார் 4000 ஸ்க்ரீன்களில் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 75 மட்டுமே வசூலிக்கப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
 
பிவிஆர், ஐநாக்ஸ் உட்பட பல மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் 75 ரூபாய் மட்டும் டிக்கெட் கட்டணமாக செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது