1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (07:13 IST)

பணம், நகையெல்லாம் வேண்டாம், வெங்காயம் தான்: திருடர்களின் அடுத்த டார்கெட்

வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி கிலோ ஒன்றுக்கு 100 முதல் 120 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையாகி வருகிறது இதனை அடுத்து தற்போது திருடர்களின் பார்வை வெங்காயத்தின் மீது விழுந்துள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 1.6 ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தை பயிர் செய்திருந்தார். வெங்காய அறுவடை இன்னும் ஓரிரு நாட்களில் செய்ய அவர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இரவோடு இரவாக திருடர்கள் அனைத்து வெங்காயத்தையும் அவர்களே அறுவடை செய்து எடுத்து கொண்டு போய்விட்டனர்
 
மறுநாள் காலையில் வெங்காய அறுவடை செய்த அந்த விவசாயிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. திருடுபோன வெங்காயத்தின் மதிப்பு ரூபாய் 30,000 இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அந்த விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவருடைய நிலத்திற்கு நேரில் சென்று பார்த்து அதன் பின்னர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் இருந்து உத்திரப்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்றில் 40 டன் வெங்காயம் இருந்த நிலையில் அந்த டிரக் கடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது வெங்காயத்தின் விலை ஏறி வருவதால் வெங்காய திருட்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது