திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (16:24 IST)

கிருஷ்ண ஜெயந்தி நாளில் ரூ. 25,000 கோடிக்கு வர்த்தகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி..!

Krishna Jayanti
நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் கோடி வர்த்தகம் ஆகி உள்ளதாக கூறி இருப்பதை அடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 25 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் அதிக அளவு பிசினஸ் நடக்கும் என்றாலும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு வர்த்தகம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பூக்கள், இனிப்பு வகைகள், ஆடைகள், அலங்கார பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், கிருஷ்ணர் சிலை மற்றும் பொம்மைகள் ஆகியவை அதிக அளவு விற்பனையாக உள்ளதாக வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களில் தான் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பக்தர்கள்  விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபட்டதால் பேருந்து,ரயில், போக்குவரத்து துறையிலும் நல்ல வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva