திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (15:06 IST)

வாடகைக்கு பைக்.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகம் செய்யும் புதிய திட்டம்..!

bullet royal enfield
சொந்த பைக் இல்லாதவர்கள் வாடகைக்கு பைக்குகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 
 
முதல் கட்டமாக சென்னை பெங்களூர் டெல்லி திருவனந்தபுரம் மும்பை உள்ளிட்ட 27 நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.  
 
பைக்குகளின் வாடகை என்பது, பைக்கின் மாடலுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
எனவே சொந்த பைக் இல்லாதவர்கள் இனி வாடகையை கவலை இன்றி வாடகைக்கு பைக் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகை சைக்கிள் போலவே வாடகை பைக் திட்டம் வந்துள்ளதால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran