1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (11:20 IST)

அபாய கட்டத்தை தாண்டிய ரிஷப் பண்ட்!? டாக்டர்கள் நம்பிக்கை!

கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானதையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரிஷப் பண்ட் நலம் பெற்று திரும்ப பலரும் கடவுளை வேண்டி வருகின்றனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்டுடன் பயணித்தவர்களும் அபாய கட்டத்தில் இல்லை என கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

Edit By Prasanth.K