1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2014 (11:25 IST)

அமித் ஷா, சோனியா காந்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டதாகக் கூறி பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், அதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, தகவல் ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் சுபாஸ் அகர்வால் தகவல் ஆணையத்திடம் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து பதிலளிக்குமாறு 6 கட்சிகளுக்கும் தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் சில கட்சிகள் பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து, தகவல் ஆணையம் தற்போது மீண்டும் இக்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி, பதில் அளிக்காவிட்டால், எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் தகவல் ஆணையத்துக்கு உள்ளது என்று இந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.