வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (18:32 IST)

பணக்கார ரவுடி படுகொலை : எதிரிகளின் சூழ்ச்சி காரணமா?

கர்நாடக மாநிலம் பெங்களூரை  அடுத்து உள்ளது தும்கூர் மாவட்டம். இங்குள்ள குனிகல் என்ற  பகுதியில் வசித்து வந்தார் ராமா . இவரது அண்ணன் லட்சுமன். இவர்கள் இருவரும் 1990ஆம் ஆண்டில்  பெங்களூருக்குச் சென்றனர். இதனையௌடுத்து 1995 ஆன ஆண்டில் ராமாலட்சுமணன் இருவரும்  அப்பகுதில் ரவுடித் தொழில் செய்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து ராமா லட்சுமணன் ஆகிய இருவர் மீதும் பெங்களூர் நகரில் பல ஆட்கொணர்வு, கொலை கொள்ளை, போன்ற பல்வேறு வழக்குகள் போலீஸாரால் பதியப்பட்டன. 
 
ஆனாலும் இவர்கள் திருந்தவில்லை மேலும் ரவுடிகளுடன் கூட்டணி வைத்து பல் கோடீஸ்வரர்களை மிரட்டி பல கோடி ரூபார் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளனர். அதை மறுவிற்பனை செய்து அதன் மூலம் பலத்த லாபம் சம்பாதித்துள்ளதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 
இன்றைக்கு லட்சுமணாவின் சொத்து மதிப்பு ரூ.600 கோடியாகும். அதனால் இவனை பணக்கார ரவுடி என்று கூறுகிறார்கள்.
 
தன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். பின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு மாறினார்.
 
இந்நிலையில் பெங்களூரில் கூடுதல் கமிஷனர் அலோக்குமார் தலைமையில் பதவியேற்ற பிறகு ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதில் லட்சுமணா வீட்டில் போலீஸ் சோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் ஆவணங்கள் கிடைத்ததால் லட்சுமணாவை சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதுதான் ஜாமீனில் இருந்து வெளுயே வந்தார் லட்மணா. பின்னர் தனது விலையுயர்ந்த காரில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலை சம்பவம் நடந்த அன்று அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.